புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை சின்னகடைவீதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை சின்னகடைவீதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
மயிலாடுதுறை சின்னகடைவீதி என்பது மாயூரநாதர் கோவில் வடக்குவீதி ஆகும். இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.இதை பற்றி அறிந்து அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று திடீரென்று மாயூரநாதர் கோவில் வடக்குவீதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பைன நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், பா.ம.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்,, நகராட்சி கவுன்சிலர்கள், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைமுன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஊழியர்கள் அந்த டாஸ்மாக் கடையை மூடிவிட்டி சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது கலால் தாசில்தார் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) அமைதிபேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்படும் என்றும், அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.