ெபாதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ெபாதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜீவா நகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொள்ள உறுப்பினர்கள், கொண்டரசம்பாளையம், மாருதி நகர், ஜீவா காலனி உள்ளிட்ட பகுதியில் பொது மக்கள் வந்திருந்தனர்.
காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் தொடங்கியது. அப்போது ஊராட்சி மன்ற தலைவியிடம் பொதுமக்கள் கூறும்போது " கடந்த 15 நாட்களாக ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வரவில்லை. 2 மாத காலமாக குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றுவதில்லை என்றனர். அதற்கு பதில் அளித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவி ஊராட்சி சார்பில் எந்த தவறும் நடைபெறவில்லை. மேலும் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றார். இதனால் பொதுமக்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மதியம் 1.30 மணி வரை குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக விவாதிக்க குடிநீர் வினியோக அலுவலர்கள் யாரும் கிராமசபை கூட்டத்திற்கு வராததால் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மனுக்களை பெறுவதற்கு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முன்வராததால் அருகில் இருந்த விநாயகர் கோவிலில் விநாயகரிடம் மனு கொடுப்பதாக கூறி மனுவை கோவிலில் வைத்து விட்டு வந்தனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் 27 தீர்மானங்களை வாசித்து 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.