திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு 1,250 மனுக்களை மூட்டை கட்டிமாலை அணிவித்து எடுத்து வந்த மக்கள்


திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு 1,250 மனுக்களை மூட்டை கட்டிமாலை அணிவித்து எடுத்து வந்த மக்கள்
x
தினத்தந்தி 13 Jun 2023 12:26 AM IST (Updated: 13 Jun 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு 1,250 மனுக்களை பொதுமக்கள் மூட்டை கட்டிமாலை அணிவித்து எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கல்லணை சாலை ஜி.கே.மூப்பனார் நகர் நலச்சங்க தலைவர் செல்லத்துரை தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது, அவர்கள், 1,250 மனுக்களை ஒன்றாக அடுக்கி வைத்து மூட்டையாக கட்டி, அதற்கு மாலை அணிவித்து, தண்டோரா போட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் ஊர்வலமாக வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி சங்க நிர்வாகிகள் கூறும்போது, கூலி தொழில் செய்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தினர் சுமார் 800 பேருக்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 350 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 23-11-2020-ம் ஆண்டு முதல் பல முறை மனு கொடுத்துவிட்டோம். இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து சென்றனர்.


Next Story