மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 'வாட்ஸ்அப்'பில் தெரிவிக்கலாம்


மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்
x

மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் ‘வாட்ஸ்அப்’பில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

மின்சாரம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 'வாட்ஸ்அப்'பில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை, மின்விபத்துகள், அறுந்து தரையில் கிடக்கும் மின் கம்பிகள், மின் மீட்டர் குறித்த புகார்கள், தாழ்வான மின் கம்பிகள் போன்ற வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்படும் மின்சாரம் சம்பந்தப்பட்ட புகார்களை மேற்பார்வை பொறியாளரின் 'வாட்ஸ்அப்' எண் 6380283535 மூலமாக தெரிவிக்கலாம்.

மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 மற்றும் 9498794987 மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இந்த தகவலை வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story