குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x

ஓகைப்பேரையூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

ஓகைப்பேரையூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குப்பைகள் தரம் பிரிக்கும் மையம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூர் ஊராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மைய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த மையத்தில் ஓகைப்பேரையூர் ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் அள்ளப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் கொண்டு சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கஜா புயலின் போது இந்த குப்பைகள் தரம் பிரிக்கும் மைய கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதை முழுவதுமாக அகற்றி அங்கு புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் தற்போது குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

புதிய கட்டிடம்

மேலும் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு போதுமான இடவசதி இல்லை என்றும் தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். எனவே, கஜா புயலின் போது இடிந்து விழுந்த குப்பைகள் தரம் பிரிக்கும் மைய கட்டிடத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story