கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா?   கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x

கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்டப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய வழித்தடம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் இருந்து புனவாசல் வழியாக திருவாரூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை திருவாரூர், கூத்தாநல்லூர், மன்னார்குடி, நாகை, தஞ்சை போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். எனவே இந்த சாலையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதே சாலையில் புனவாசல் என்ற இடத்தில் அன்னமரசனார் ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலான பாலம் என்பதால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அகலமான பாலம்

மேலும் பாலம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. எனவே இந்த குறுகலான பாலத்துக்கு பதிலாக புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story