அரிச்சந்திரபுரத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

அரிச்சந்திரபுரத்தில் சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x

அரிச்சந்திரபுரத்தில் சமுதாய கூட கட்டுமான பணிகள் முடங்கி கிடக்கின்றன. இந்த சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

அரிச்சந்திரபுரத்தில் சமுதாய கூட கட்டுமான பணிகள் முடங்கி கிடக்கின்றன. இந்த சமுதாய கூடம் திறப்பு விழா காண்பது எப்போது? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமுதாய கூடம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் அடுத்த அரிச்சந்திரபுரத்தில் அரசு சார்பில் சமுதாய கூடம் கட்டுமான பணிகள் நடந்தது. இதன் கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்படவில்லை.

பல ஆண்டுகளாக கட்டுமான பணிகள் முடங்கி கிடக்கின்றன. சமுதாய கூட கட்டிடத்தின் மேல் தளம் கட்டப்படாமலும், கீழ்தளத்தில் தரைதளம் உட்பட கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்கப்படாமலும் உள்ளன.

கிராம மக்கள் வேதனை

அரசு சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்த சமுதாய கூடத்தின் கட்டுமான பணிகள் பாதியிலேயே முடங்கி கிடப்பது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'காட்சி பொருளாக மாறி உள்ள இந்த சமுதாய கூட கட்டிடத்தை சுற்றி புதர்கள் சூழ்ந்து, கட்டிடம் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. கட்டுமான பணிகள், முழுமையாக முடிக்கப்பட்டு சமுதாய கட்டிடம் திறப்பு விழா காண்பது எப்போது? என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பாதியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை விரைவில் முடித்து சமுதாய கூடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்' என்றனர்.

Next Story