குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பொதுமக்கள் அவதி
பொதக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பொதக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மண் சாலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் ஹாஜியார் தெரு உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இந்த தெருவில் உள்ள சாலை மண் சாலையாகவே இருந்து வருகிறது. இதனால், சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.
அதனால், மழை பெய்யும் போது மண் சாலையில் உள்ள பள்ளங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, கடைவீதி போன்ற இடங்களுக்கு சென்று வருபவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிற்து. மேலும், வாகன ஓட்டிகள் பலர் பள்ளங்களில் விழுந்து காயம் அடைந்தனர்.
மழைநீர் தொடர்ந்து பல நாட்கள் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து இருப்பதாகவும் மக்கள் ேவதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கவும், மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.