துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? - பொதுமக்கள்


துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? - பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகாதேவபட்டினத்தில் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

மகாதேவபட்டினத்தில் துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

துணை சுகாதார நிலையம்

மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு செவிலியர் வந்து தினமும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை கண்காணித்து மருந்து மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதனால் இந்த துணை சுகாதார நிலையம் கிராமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த துணை சுகாதார நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது.

கட்டிடம் சிதிலம் அடைந்ததை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. இதில் இயங்கி வந்த துணைசுகாதார நிலையம் தற்போது மகாதேவபட்டினம் நூலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இதனால் கீழ்தளத்தில் இயங்கி வந்த நூலகம் தற்போது முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம்

துணை சுகாதார நிலையம் செயல்படுவதால், நூலகத்தை பயன்படுத்துவோர் குறைந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். சேதம் அடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story