லெட்சுமாங்குடியில் இருக்கை வசதியுடன் பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும்- கிராம மக்கள்


லெட்சுமாங்குடியில் இருக்கை வசதியுடன் பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும்- கிராம மக்கள்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:30 AM IST (Updated: 11 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

லெட்சுமாங்குடியில் இருக்கை வசதியுடன் பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

லெட்சுமாங்குடியில் இருக்கை வசதியுடன் பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடியை மையமாக கொண்ட 4 வழிச்சாலையில் வடபாதிமங்கலம் செல்லும் வழித்தடத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.

இந்த பயணிகள் நிழலகத்தை கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பழையனூர், நாகங்குடி, பண்டுதக்குடி, ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், புள்ளமங்கலம், சேந்தங்குடி, செருவாமணி, எட்டுக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இருக்கை வசதி இல்லை

இந்த நிலையில் பயணிகள் நிழலகம் சேதம் அடைந்து, காணப்படுகிறது. ்அதில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மழைநீர் ஒழுகுகிறது. மேலும் மழை பெய்யும் போது நிழலகத்தை மழைநீர் சூழ்ந்து விடுகிறது. பயணிகள் நிழலகத்தில் அமரும் வகையில் இருக்கைகள் வசதியாக இல்லை. இதனால் பயணிகள் பெரும்பாலும் சாலையோரங்களில் பஸ்சுக்காக நின்றபடி காத்திருக்க வேண்டி உள்ளது.

பயணிகள் நிழலகம் கடைவீதியில் உள்ளதால் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. சேதம் அடைந்த பயணிகள் நிழலகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த பயணிகள் நிழலகத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் இருக்கை வசதியுடன் புதிய பயணிகள் நிழலகம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story