சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள்
குத்தாலம் போலீஸ் நிலையம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
குத்தாலம்:-
மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் குத்தாலம் போலீஸ் நிலையம் அருகே 50 அடி தூரத்துக்கு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சாலை வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த நிலையில் சாலை மோசமாக இருப்பதால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், இந்த சாலை வழியாக அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story