மக்கள் நேர்காணல் முகாம்
மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் மண்டபத்தில் திருக்கண்ணபுரம், திருப்புகலூர், கீழப்பூதனூர் உள்ளிட்ட 3 வருவாய் கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் ரம்யா தலைமை தாங்கினார். திருக்கண்ணபுரம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேசன் முன்னிலை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி அமைத்து தரக்கோரி 25-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தரபாண்டியன், முத்துக்குமார், ஊராட்சி செயலர் மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story