ஆலங்குடி வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
ஆலங்குடி வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஆலங்குடி சந்தை கூடியது. அதன்படி சந்தையில் காய்கறிகள், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் கோழி உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் முண்டி அடித்தனர். தீபாவளி பலகாரங்களுக்கு தேவையான பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் உற்சாகத்துடன் வியாபாரம் செய்தனர்.
இதற்கிடைேய மாலையில் சாரல் மழை பெய்தது. இந்த வாரம் ஆலங்குடி சந்தையில் நல்ல நிலையில் வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story