தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்


தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி வீதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்

தென்காசி

தென்காசி வீதிகளில் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

வருகிற 24-ந் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, தங்களது வீடுகளில் பலகாரங்கள் தயார் செய்து உண்டு மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

இதற்காக தென்காசியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் முக்கிய வீதிகள் அனைத்திலும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக மேல ஆவணி மூல வீதியில் காலையிலிருந்து இரவு வரை அதிகமான கூட்டம் காணப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு

இதேபோன்று நான்கு ரத வீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சுன்னதி பஜார், பழைய பஸ் நிலையம் ஆகிய அனைத்து பகுதிகளும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து ஜவுளி, பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் நேற்று அதிகமானோர் குவிந்ததால் வர இருக்கும் நாட்களில் மேலும் பொதுமக்கள் தென்காசி வீதிகளில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கூட்டத்தையொட்டி தென்காசி நகர போலீசார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.



Next Story