சினிமா படப்பிடிப்பை பார்க்க ஆர்வமுடன் திரண்ட மக்கள்


சினிமா படப்பிடிப்பை பார்க்க ஆர்வமுடன் திரண்ட மக்கள்
x

லத்தேரி அருகே சினிமா படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டனர்.

வேலூர்

'என் காதலே' என்ற பெயரில் சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. தமிழ் கலாச்சாரத்தை விரும்பும் ஆங்கிலேய இளம் பெண், தமிழக வாலிபரை காதலிக்கும் கதையை மையமாகக் கொண்டு படம் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிப்பவர் வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவராவார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் லத்தேரியை அடுத்த கொத்தமங்கலம் - சோழமூர் இடையே அமைந்துள்ள கொட்டாற்றில் நடந்த படப்பிடிப்பில் நடன குழுவினருடன் கதாநாயகியின் நடன காட்சி பதிவு செய்யப்பட்டது.

ஆற்றின் மணல் படுகையிலும், ஆற்றின் கரை பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்ததை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டமாக ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.

அப்போது அவர்கள் நடிகர், நடிகைகளை ஆர்வமுடன் பார்க்க நெருங்கிச் சென்றதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.


Next Story