மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
x

மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனா்.

ஈரோடு

ஈரோடு ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் மீன் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் மற்றும் அணை மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். நேற்றும் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் வஞ்சிரம், ஊளி, நகரை, சீலா, நெத்திலி, கட்லா, லோகு, பாறை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் அதிகமாக விரும்பி வாங்கி சென்றார்கள்.


Related Tags :
Next Story