பூம்புகார் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
பூம்புகார் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்
காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடமான பூம்புகார் சங்கமத்துறையில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காவிரி மற்றும் கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும், காசிக்கு நிகரான பலன்களை தரும் பூம்புகார் சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவிலில் உள்ள ஐராவத புனித தீர்த்த குளத்திலும் பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர். தற்போது காவிரியில் அதிக அளவு நீர் வரத்து அதிகரித்து, காவிரி சங்கமத்துறைக்கு அதிக அளவில் நீர் வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினார்கள்.
பாதுகாப்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சீர்காழி, மயிலாடுதுறை, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூம்புகாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.