தீபாவளி பண்டிகைக்கு 1 வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு 1 வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
x

தீபாவளி பண்டிகைக்கு 1 வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

தீபாவளி பண்டிகைக்கு 1 வாரமே உள்ள நிலையில் திருப்பூர் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி கொண்டாட்டத்திற்கு தயாராகி விடுவார்கள்.

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் கடந்த 2 வாரங்களாக கடைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் விடுமுறை நாளான நேற்று திருப்பூர் கடை வீதிகளில் உள்ள ஜவுளி, நகை, பேன்சி, செருப்பு, ஓட்டல்கள் என அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோர கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

பெரும்பாலான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்காக 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் அதிக அளவில் படையெடுத்ததால் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆங்காங்கே போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

----

3 காலம்

புதுமார்க்கெட் வீதியில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியைதை படத்தில் காணலாம்.

Next Story