குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி பேரூராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

ஊத்துக்குளி பேரூராட்சி கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 6-வது வார்டு உறுப்பினர் பழனிச்சாமி, 13-வது வார்டு உறுப்பினர் சரவணன் மற்றும் 15-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி ஆகியோர் குன்னம்பாளையம், செட்டிபாளையம் பகுதி ஊர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்து தங்களது வார்டு பகுதியில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் வசதி, சாலை வசதி, வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது எனக் கூறி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூமி பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்த பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஊத்துக்குளி பேரூராட்சி முன்பு பொதுமக்கள் திரண்டு இருப்பதை பார்த்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் பேரூராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. ஜெயக்குமார் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வார்டு பகுதிக்கும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும் எனவும் அனைத்து வார்டு பகுதிக்கும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தனம், காஞ்சனா, பிரவீனா, பேபி, சரஸ்வதி, கணேஷ், பூபதி வேல்முருகன், மணிகண்டன், கண்மணி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

---


Next Story