காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.


காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.
x

காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.

திருப்பூர்

போடிப்பட்டி,

காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.

4 நாட்கள் பண்டிகை

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் தொடர்ச்சியாக பண்டிகைக் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. வீடுகளை சுத்தப்படுத்தி பழையன கழிதலும் என கொண்டாடிய போகிப்பண்டிகை, பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழா, உழவனுக்கு உறுதுணையாகும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப்பொங்கல் என்ற வரிசையில் உற்சாகமாக உறவுகளையும், நட்புகளையும், சுற்றுலாத்தலங்களையும் கண்டு மகிழும் வகையில் கொண்டாடப்படும் காணும் பொங்கல் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி பலரும் குடும்பத்துடன் உற்சாகமாக பொழுதைக் கழிக்கும் வகையில் வெளியூர் பயணம் மேற்கொண்டனர்.இதனால் உடுமலை நகரப் பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது.அதுமட்டுமல்லாமல் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள ஏராளமான பொதுமக்கள் உடுமலை பஸ் நிலையத்தில் திரண்டனர்.

குழந்தைகள் ஏமாற்றம்

குறிப்பாக பழனி, திருமூர்த்திமலை, அமராவதி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பஸ்களில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆனாலும் கிராமப்புறங்களிலிருந்து போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல கிராமப்புற பஸ்கள் நிறுத்தப்பட்டன.அவற்றில் பல பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. ஆனால் இன்று வரை ஒருசில கிராமப்புற பஸ்கள் இயக்கப்படவில்லை. இது வழக்கமாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களுக்கு செல்லும் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று காணும் பொங்கலையொட்டி பலரும் வெளியூர் செல்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பெருமளவு நேரம் பஸ்களுக்கு காத்திருப்பதிலேயே செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் உற்சாகமாகக் கழிக்க வேண்டிய நேரம் வீணடிக்கப்பட்டதால் குழந்தைகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

அதுமட்டுமல்லாமல் உடுமலை பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி இல்லாததால் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால் சோர்வடையும் நிலை ஏற்பட்டது.இனிவரும் காலங்களில் பண்டிகைக் காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story