பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்...பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்


பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்...பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
x

சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து கானப்படுகிறது.

சென்னை,

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைய முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகினனர். ரெயில் மற்றும் பேருந்துகளில் பெரும்பாலான இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், மக்கள் தங்களது பயண நேரத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

இன்று முதல் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து கார், பைக் என தங்களது சொந்த வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்ல தொடங்கியுள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து கானப்படுகிறது.

குறிப்பாக தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், அந்த பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது.


Next Story