மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 180 மனுக்கள் பெறப்பட்டன

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். முகாமில் வங்கிக் கடன், முதிேயார் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டன.

அதனைத்தொடர்ந்து வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த ராசியம்மாள் என்பவர் பாம்பு கடித்து இறந்ததை முன்னிட்டு அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், நாகூரைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையையும் திருக்குவளை தாலுகா நீர்மூளை, ஓடாச்சேரி கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையையும் கீழ்வேளூர் தாலுகா பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயசித்ராவுக்கு தையல் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், திருநங்கைகள் 2 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினையும் கலெக்டர் வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story