மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜ மனோகரன், சமூக நலன் மற்றும் மகளிர் திட்ட உரிமை துறை அலுவலர் முத்துமாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா சகி, ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, வழக்கு பணியாளர் நிஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பஸ் வசதி உள்ளிட்ட 258 மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.

மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதிரி பாதுகாப்பு புகார் பெட்டகத்தினை வைத்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையினை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.


Next Story