கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்


கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்
x

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், நேற்று காலை கொள்ளிடம் ஆற்றில் 90 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடுதிட்டு, முதலைமேடு, நாணல்படுகை, வெள்ளமணல், குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, பாலூரான்படுகை, மேலவாடி, கீழவாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முகாம்

கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய திட்டு கிராமங்களை மீண்டும் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே கிராம மக்கள் மீண்டும் முகாம்களில் தங்க வைக்கக்கூடிய நிலை ஏற்படலாம். கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேடான இடங்களுக்கு ஓட்டிச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story