குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு


குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
x

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,


திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம்

திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு அண்ணாநகரை அடுத்த செந்தில்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு தனியார் ஒருவரின் கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ேகாபுரம் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அதே கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி 3-வது வார்டு கவுன்சிலர் லோகநாயகி மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் மனு வழங்கினார்.இந்த மனுவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

ஆனால் அதையும் மீறி செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர் தலைமையில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கோபுரம் அமைக்கும் பணி

இதுதொடர்பாக மீண்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு முறையாக மனு அளிக்குமாறும், அதுவரை கோபுரம் அமைக்கும் பணி நடைபெறாது என்றும் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story