உயர்கோபுர மின்விளக்கு விரைந்து அமைக்கப்படுமா?


உயர்கோபுர மின்விளக்கு விரைந்து அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 April 2023 12:30 AM IST (Updated: 9 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே உயரகோபுர மின் விளக்கு விரைந்து அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உயரகோபுர மின் விளக்கு விரைந்து அமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோரையாறு

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோரையாறு பகுதி திருவாரூர்- மன்னார்குடி வழித்தடத்தில் உள்ளது. இந்த பகுதி வழியாக திருச்சி, தஞ்சை, நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை மற்றும் சென்னை பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் கோரையாறு பாலம் உள்ள பகுதி வடகோவனூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 3 பிரிவு சாலைகளை கொண்டதாக அமைந்துள்ளது. கோரையாறு பாலம் அருகில் பஸ் நிறுத்தமும் உள்ளது. மேலும் அங்கு குடியிருப்புகளும் இல்லை.

மின் விளக்கு வசதி இல்லை

இந்த நிலையில் இரவு நேரங்களில் கோரையாறு பாலம் எதிரே உள்ள பகுதி மின் விளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால், வழிப்பறி திருட்டுகள் அதிகளவில் நடக்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோரையாறு பாலம் எதிரே உயர் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து கோரையாறு பாலம் எதிரே உயர் கோபுரம் அமைப்பதற்காக தரைத்தளம் அமைக்கப்பட்டது.

விரைந்து அமைக்க கோரிக்கை

தரைத்தளம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உயர்கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோரையாறு பாலம் எதிரே உயர் கோபுர மின்விளக்கை விரைந்து அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story