பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகும் மக்கள்: சந்தையில் விற்பனை விறுவிறுப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி


பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட  தயாராகும் மக்கள்:  சந்தையில் விற்பனை விறுவிறுப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Jan 2023 8:54 AM IST (Updated: 13 Jan 2023 11:00 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு ஒன்றின் விலை சராசரியாக ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

கரும்பு ஒன்றின் விலை சராசரியாக ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கலுக்கு தேவையாக இஞ்சி, மஞ்சள், தோரணங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு, பொங்கல் சிறப்பு சந்தையில் விடிய விடிய கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து தந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story