திருப்பூரில் குடிசை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம்


திருப்பூரில் குடிசை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம்
x

திருப்பூரில் குடிசை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர்

நல்லூர்,

திருப்பூரில் குடிசை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குடிசைகள்

திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு காசிபாளையம் நொய்யல் ஆற்றோரம் கடந்த 35 ஆண்டுக்கு மேல் 37 வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்ற உத்தரவின்படி காலி செய்ய அரசு வலியுறுத்தியது. இதனால் பொதுமக்களே தங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினார். வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் மாற்று இடம் வேண்டும் என இலவச வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 பேருக்கு தலா 1 சென்ட் வீதம் காங்கயம் சாலை, சென்னிமலை பாளையம், வஞ்சியம்மன் கோவில் அருகில் அதிகாரிகள் முன்னிலையில் இடம் வழங்கப்பட்டது.

அவர்கள் அங்கு கடந்த 9 மாதமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடம் நீர் நிலை புறம்போக்கு என கூறப்படுகிறது. இதனால் கன மழைக்காலங்களில் அவ்வழியாக மழைநீர் செல்லும் நீர்வழி பாதையாக இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் கனமழை காரணமாக பி.ஏ.பி.வாய்க்கால் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் வஞ்சியம்மன் கோவில் அருகே உள்ள குட்டையில் நீர் அதிகரித்து நிரம்பி 21 பேருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நீர் தேங்கி குளம் போல் நிற்கிறது.

போராட்டம்

இதனால் குடிசையில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வசித்து வரும் வீடுகளுக்குள் வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள் ஈரப்பதமாக உள்ளது. குளிர் காலம் என்பதால் சளி, இருமல், கொசு தொல்லை என பல்வேறு தொற்று நோய் வருவதாகவும், பள்ளி குழந்தைகள் படிக்க மின்சாரம் இல்லை எனவும், குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எங்கள் பகுதியை எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்வதில்லை தெரிவித்தனர். மேலும் வீட்டு முன்பு தேங்கி நின்ற மழை நீரில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காகித ஓடம் செய்து தேங்கி நிற்கும் மழைநீரில் விட்டு ஆதங்கத்தை தெரிவித்தனர்.

எனவே மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அப்பகுதியில் நீர் தேங்கி நிற்காதவாறு வாய்க்கால் அமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்துதர கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

---

படம் உண்டு 3 காலம்

காகித ஓடம் செய்து நீரில் விட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்


Next Story