போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு


போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
x

மரவியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

மரவியாபாரியை பீர் பாட்டிலால் குத்திய நபரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மரவியாபாரி

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள காரியாவிடுதி வெட்டிக்காட்டான்தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது43). மரவியாபாரி. இவரை புதுவிடுதியை சேர்ந்த ரவி என்பவர் கடந்த மாதம் 22-ந்தேதி ஊரணிபுரம் மதுக்கடை அருகே பீர் பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பு

இதுகுறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளைச்சாமியின் உறவினர்கள் நேற்று திடீரென திருவோணம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு, சம்பந்தப்பட்ட ரவியை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி போலீசாரிடம் முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா சம்பந்தப்பட்ட ரவியை விரைவில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளைச்சாமியின் உறவினர்கள் திருவோணம் போலீஸ் நிலையத்திலிருந்து கலந்து சென்றனர்.


Next Story