கல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மெய்யபுரம் பகுதியில் தனியார் கல் குவாரியின் அனுமதியை ரத்து செய்து மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக தமிழக மக்கள் மன்ற தலைவர் ராசக்குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இயற்கை ஆர்வலர் முகிலன் உள்பட சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story