காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x

திருத்துறைப்பூண்டி அருகே கூடுதலாக குடிநீா் குழாய்கள் அமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கோட்டூர்;

திருத்துறைப்பூண்டி அருகே கூடுதலாக குடிநீா் குழாய்கள் அமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் குழாய்கள்

திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி கீழத் தெரு கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இந்த பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. எனவே ஊராட்சி நிர்வாக சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது அந்த கிராமத்திற்கு மூன்று குடிநீர் குழாய்கள் மட்டுமே அமைத்ததால் பொதுமக்கள் கூடுதலாக குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த தகவலும் வராததால் நேற்று மாலை கிராம மக்கள் காலிகுடத்துடன் குழந்தைகளோடு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து போலீசாரிடம் பேசினர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் செல்போனில் பேசினார்.அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்து இந்த முடிவை போராட்டக்காரர்களிடம் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி - களப்பால் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story