கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x

திருத்துறைப்பூண்டி அருகே, தூக்கில் பெண் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி,

திருத்துறைப்பூண்டி அருகே, தூக்கில் பெண் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தூக்கில் பெண் பிணம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(வயது40). இவருக்கும் நாகை மாவட்டம் ஒக்கூர் பகுதியை சேர்ந்த ரூபிணிக்கும் (30)கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரூபினி நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் ரூபிணி கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் ரூபிணியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story