உடலை பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
அதிராம்பட்டினத்தில் மீனவர் உயிரிழந்தார். அவர் உடலை பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம்;
திராம்பட்டினத்தில் மீனவர் உயிரிழந்தார். அவர் உடலை பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரேத பாிசோதனை
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான கரையூர் தெருவை சேர்ந்தவர் சங்கர். மீனவரான இவர் நேற்று உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் சங்கருக்கு இறுதி சடங்குகள் செய்ய முயன்றனர். இந்தநிைலயில் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு ஒரு தாலை பேசி அழைப்பு வந்தது.இதில் பேசிய நபர் சங்கர் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறினாா். இதனால் சங்கர் வீட்டுக்கு சென்ற அதிராம்பட்டினம் போலீசார் சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனா்.
பேச்சுவார்த்தை
இதை கண்டித்து பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் சங்கரின் உடல் ஒப்படைக்கப்பட்டது.