விபத்து பகுதிகளில் தானியங்கி சோலார் சிக்னல்


விபத்து பகுதிகளில் தானியங்கி சோலார் சிக்னல்
x

விபத்து பகுதிகளில் தானியங்கி சோலார் சிக்னல்

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் முக்கிய சாலையில் அதிக விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. விபத்துக்கள் இல்லாத பயணங்கள் தொடரும் வகையில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறை பகுதிக்குட்பட்ட, அவினாசிபாளையம்-பல்லடம் சுங்கச்சாவடி, சென்னிமலை நால்ரோடு சந்திப்பு, திருப்பூர்-காங்கயம் வழி வாய்க்கால்மேடு, வெள்ளகோவில் மகாராஜா கோவில் எதிரில், மூலனூர் ரோடு சந்திப்பு, கருகம்பாளையம், காரணம்பேட்டை-சோமனுார் ரோடு, வெள்ளகோவில்-அவிநாசிபாளையம் ரோடு, நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம், பல்லடம்-உடுமலை ரோடு, குள்ளம்பாளையம் பஸ்நிறுத்தம் ஆகிய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியை அதிவேகத்தில் கடக்கும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், மஞ்சள் விளக்கு அணைந்து அணைந்து. தொடர்ந்து எரியும் வகையிலான சோலார் சிக்னல், வட்டார போக்குவரத்து துறையால் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியில் இது செயல்படுத்தப்பட்டது.. திட்டம் குறித்து கலெக்டர் வினீத், போக்குவரத்து கோவை சரக இணை கமிஷனர் சிவகுமார் ஆகியோரிடம் தெரிவித்தபோது ஒப்புதல் வழங்கினர். தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த சோலார் சிக்னல் நிறுவப்பட்டது என்றார்.

----


Next Story