முத்தூர் அருகே ராசாத்தாவலசு அரசு நடுநிலைப்பள்ளி முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேகத்தடை
முத்தூர்
முத்தூர் அருகே ராசாத்தாவலசு அரசு நடுநிலைப்பள்ளி முன்பு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரசு நடுநிலைப்பள்ளி
முத்தூர் அருகே ராசாத்தாவலசு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராசாத்தாவலசு, ரங்கப்பையன்காடு, முருகம்பாளையம், வேலம்பாளையம், மேட்டாங்காட்டுவலசு, இடைக்காட்டுவலசு, குழலிபாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
முத்தூர் - காங்கயம் பிரதான சாலை ராசாத்தாவலசு பஸ் நிறுத்தம் பிரிவில் இருந்து குழலிபாளையம் வரை செல்லும் சாலையில் வேகத்தடை எதுவும் அமைக்கப்படவில்லை.
இந்த பள்ளியை கடந்து இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன.
விபத்து அபாயம்
பள்ளியின் முன்புறம் உள்ள சாலையின் இருபுறமும் பெரிய 2 வளைவுகள் உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வளைவுகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வேகமாக திரும்பி பள்ளியை கடந்து செல்கின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்பு சாலையில் வேகமாக வரும் கனரக, இருசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பள்ளியின் முன்புறம் உள்ள சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.