அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்டங்களில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

கிராம சபை கூட்டங்களில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் லலிதா கூறினார்.

கிராமசபை கூட்டம்

மணல்மேடு அருகே உள்ள காளி கிராம ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் லலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-இதுவரை கிராம சபை கூட்டம் குடியரசு தினம் தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்தது.

6 முறை நடைபெறும்

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ந்தேதி மற்றும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கூடுதலாக கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் இனிமேல் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும்.கிராம சபை கூட்டம், கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கிராம சபை கூட்டங்களில் அரசுத்துறை திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கூட்டுறவுத்துறையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வேளாண்மைத்துறையில் என்னென்ன திட்டங்கள் உள்ளது. அது எவ்வாறு பொதுமக்களுக்கு சென்றடைகிறது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அரசு உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கான அரசுத்துறை திட்டங்கள் அனைத்தும் முறையாக சென்றடைகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுரேசு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, அன்பரசு, காளி ஊராட்சி மன்ற தலைவர் தேவிஉமாபதி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்தி ஸ்டாலின் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.


Next Story