கொரோனா பரவலை தடுக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும்


கொரோனா பரவலை தடுக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும்
x

கொரோனா பரவலை தடுக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கொரோனா பரவலை தடுக்க மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா

நமது நாட்டில் புதிய வகை கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முக கவசம் அணிய வேண்டும்

புதிய வகை கொரோனா பரவி வருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே உள்ள கொரோனா கால வழிகாட்டுதல் நெறிமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகளை பொறுத்தவரையில் குமரி மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு இல்லை. பாதிப்பு தொடங்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வருகை தருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது குறித்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் இதுவரை வரவில்லை. வந்த உடன் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story