குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

பூதப்பாண்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை

பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட வீரவநல்லூர் பகுதியில் 100-க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி அருமநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திடீர் சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த பகுதிைய சேர்ந்த ஆண்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரவநல்லூர் சந்திப்பு பகுதியில் திரண்டனர். பின்னர், அவர்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அருமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பால்மணி சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தை நடத்தினார். அப்போது நாளை(இன்று) காலை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story