குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x

நரிக்குடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் அழகாபுரி, சிறுவனூர், எம்.புதுக்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சிறுவனூர், எம். புதுக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கி குடிக்கின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

ஒவ்வொரு நாளும் குடிப்பதற்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கால்நடைகளுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அதேபோல இந்த கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுவனூர், எம்.புதுக்குளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story