ஆவணி முதல் நாளிலேயே முகூர்த்த பட்டு புடவைகளை தேர்வு செய்ய குவிந்த மக்கள்


ஆவணி முதல் நாளிலேயே முகூர்த்த பட்டு புடவைகளை தேர்வு செய்ய குவிந்த மக்கள்
x

ஆவணி முதல் நாளிலேயே முகூர்த்த பட்டு புடவைகளை தேர்வு செய்ய குவிந்த மக்கள்

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆவணமி முதல் நாளிலேயே முகூர்தத பட்டுப்புடவைகளை தேர்வு செய்ய மக்கள் குவிந்தனர்.

ரூ.70 கோடி விற்பனை இலக்கு

கும்பகோணம் அருகே திருபுவனம் என்றாலே பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது. முகூர்த்த பட்டுப்புடவைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை பல்வேறு கலைவண்ணங்களில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நெசவாளர்கள் உற்பத்தி செய்கின்றனர். 65 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 2000 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டு விற்பனை செய்ய ரூ.70 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெசவாளர்கள் மகிழ்ச்சி

இந்தநிலையில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஆவணி முதல் நாளான நேற்று காலை முதலே மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து முகூர்த்த பட்டுப்புடவைகளை தேர்வு செய்தனர். ஆவணி முதல் நாளிலேயே பட்டுப்புடவைகளை தேர்வு செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்துள்ளதால் இந்த ஆண்டு விற்பனை இலக்கை எளிதாக அடைந்து விடலாம் என நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மேலாண் இயக்குனர் செல்வம், தலைவர் தியாகராஜன் மற்றும் இயக்குனர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story