அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் மக்கள் அவதி


அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 18 May 2023 12:30 AM IST (Updated: 18 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஊழியர்கள் குடியிருப்பும் பழுதடைந்து கிடக்கிறது.

திருவாரூர்

நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஊழியர்கள் குடியிருப்பும் பழுதடைந்து கிடக்கிறது.

அரசு ஆஸ்பத்திரி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தலா 15 படுக்கை வசதிகள் கொண்ட 2 வார்டுகள் உள்ளன. அறுவை சிகிச்சை அரங்கும் உள்ளது.

10 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். துப்புரவு பணியாளர்களும் போதுமான எண்ணிக்கையில் பணியில் இல்லை.

போதுமான டாக்டர்கள்...

ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்கள் சுகாதாரமாக இல்லை என்று அங்கு வரும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களின் குடியிருப்பு வீடுகளும் பழுதடைந்து கிடக்கிறது. 5 வீடுகள் மிகவும் பழுதடைந்து யாரும் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளன.

இந்த குடியிருப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும். போதுமான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story