திருவாரூர்- மன்னார்குடி சாலையில் புகை மூட்டம்


திருவாரூர்- மன்னார்குடி சாலையில் புகை மூட்டம்
x
தினத்தந்தி 19 April 2023 12:45 AM IST (Updated: 19 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குப்பைகளை தீயிட்டு கொளுத்தியதால் திருவாரூர்-மன்னார்குடி சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

குப்பைகளை தீயிட்டு கொளுத்தியதால் திருவாரூர்-மன்னார்குடி சாலையில் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் விளமல் பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த சாலை வழியாக ஏராளமானோர் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் குப்பை தொட்டிகள் உள்ளன. இந்த குப்பை தொட்டிகளை சுற்றி பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.

இவை காற்றில் பறந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஒரு சிலர் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துவதால், அந்த சாலையில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அடிக்கடி இதுபோன்று அருகருகே குப்பைகளை குவித்து வைத்து கொளுத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மண்டலம் ஏற்படுகிறது.

விபத்து ஏற்படும் அபாயம்

நேற்று அந்த பகுதியில் குப்பைகள் கொளுத்தப்பட்டதால், புகை மூட்டம் ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் சாலையை மறைத்திருந்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் மெதுவாக சென்றனர். சிலர் கண் எரிச்சல், மூச்சு திணறல் காரணமாக இறங்கி நின்று விட்டு புகை மூட்டம் கலைந்த பின்னர் சென்றனர். குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் புகை மூட்டம் ஏற்பட்டு விபத்து நடக்கும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் கொட்ட வைப்பதோடு, அவற்றை அவ்வப்போது அகற்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story