இ-சேவை மையத்தில் மின்விசிறி இல்லாமல் பொதுமக்கள் அவதி


இ-சேவை மையத்தில் மின்விசிறி இல்லாமல் பொதுமக்கள் அவதி
x

இ-சேவை மையத்தில் மின்விசிறி இல்லாமல் பொதுமக்கள் அவதி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் சுமார் 30 பேருக்கு தினமும் டோக்கன் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் பெற வாங்க வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் அந்த இ-சேவை மையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அங்கு மின்விசிறி போன்ற வசதிகள் இல்லை. இதனால் சரியான காற்றோட்ட வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக தற்போது கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இ-சேவை மையத்திற்கு செல்லும் முதியவர்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அங்கு நிலவும் புழுக்கத்தால் புலம்பி தவிக்கின்றனர். இ-சேவை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி. பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. ஊழியர்களுக்காக இருக்கும் ஒரு மின்விசிறியும் சிறிய அளவில் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் மின்விசிறி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story