முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
x

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்க்ள தர்ப்பணம் கொடுத்தனர்.

திருவண்ணாமலை

மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்க்ள தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்துக்கள் ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

வழக்கமாக ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை தினமான இன்று திருவண்ணாமலை அய்யங்குளக்கரை, ஈசான்ய குளக்கரை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த கரையில் உள்பட பல்வேறு முக்கிய நீர் நிலைப்பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதற்காக அதிகாலை முதலே அங்கு மக்கள் குவிந்தனர். அவர்கள் சிவாச்சாரியார்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் அருகில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இத போல கங்கையம்மன் கோவில் அருகிலும், கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியிலும் பொதுமக்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

போளூர்

போளூரில் ஏராளமானோர் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

காஞ்சி சங்கர வேதபாடசாலை, கைலாசநாதர், வேணுகோபால் சுவாமி, ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு வேதபண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, எள் வைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மேலும் மகாளய அமாவாசையை முன்னிட்டு போளூர் ஆரிய வைசிய சமாஜத்தினர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

வந்தவாசி

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இதையொட்டி சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்களுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்.

இதில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு சென்றனர்.

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள குளக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


Next Story