தப்பி ஓட முயன்றவரை பிடித்து கை, கால்களை கட்டிய பொதுமக்கள்
பாணாவரம் அருகே பொதுமக்கள் விசாரித்தபோது தப்பி ஓடி பதுங்கிய வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டி ஒப்படைத்தனர். அந்த நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
காவேரிப்பாக்கம்
பாணாவரம் அருகே பொதுமக்கள் விசாரித்தபோது தப்பி ஓடி பதுங்கிய வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டி ஒப்படைத்தனர். அந்த நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
நோட்டமிட்டவர் ஓட்டம்
பாணாவரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள பாறைமேடு பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் கூலி தொழிலாளி ஏழுமலை என்பவரின் வீட்டில் மா்ம நபா் ஒருவர் நேற்று மாலை இருளாக இருந்த நேரத்தில் வீட்டின் வாசற்படியில் நுழைந்து நோட்டமிட்டுள்ளார்.
இதனை க்கண்டதும் வீட்டில் இருந்த ஏழுமலையின் மகன் அந்த நபரை யார்?என்ன வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மா்ம நபா் எதையும் கூறாமல் பின்வாங்கியுள்ளார்.
உடனே பக்கத்து வீட்டின் அருகே இருந்த ஏழுமலையின் மனைவி தனலட்சுமி மா்ம நபரை விசாரிக்க வந்தபோது அந்த நபர் அருகில் இருந்த குளத்தில் குதித்து புதருக்குள் மறைந்தார்.
கை, கால்களை கட்டினர்
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் க்ஓடி வந்து மா்ம நபரை தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடிய நிலையில் குளத்தில் உள்ள புதருக்குள் ஒளிந்திருந்த மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் கை, கால்களை கட்டி வைத்து பாணாவரம் போலீசாருக்கு தெரிவித்தனர். ஆனால் போலீசார் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தனர்.அவர்கள் அந்த நபரை கைகால்கள் கட்டப்பட்டிருந்ததை அவிழ்த்துவிட்டு விசாரித்து வந்த நிலையில் மீண்டும் தப்பி தலைமறைவாகியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் முறையான பதில் அளிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.