சிறுமலைக்கு சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளிகள்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் சிறுமலைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் விசாகன் உத்தரவின் பேரில், மாற்றுத்திறனாளிகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையில் அவர்களை சுற்றுலா அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பலவகை மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு அரசு அதிகாரிகள் சுற்றுலா அழைத்து சென்றனர்.
சிறுமலை பழையூரில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில் மாற்றுத்திறனாளிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் நீருற்றுக்கு எளிதாக சென்று மாற்றுத்திறனாளிகள் குளிக்கும் வகையில் அங்கு சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுமலையில், தென்மலை ரோட்டில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள இந்த பூங்காவை மாற்றுத்திறனாளிகள் பார்வையிட்டனர். இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, நிலக்கோட்டை, வடமதுரை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.