குளச்சலில் சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் ஆலோசனை கூட்டம்
குளச்சலில் சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குளச்சல், ஆக.28-
குளச்சலில் சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் மற்றும் சமூக நலன் அக்கறை மக்களின் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது. இனயம் சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்க நிர்வாகிகள் பிரான்சிஸ் டி.சேல்ஸ், அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நெய்தல் மக்கள் இயக்கம் குறும்பனை பெர்லின் விளக்கவுரை ஆற்றினார். கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் பார்த்தசாரதி, கடலோர மக்கள் சங்கம் சேவியர், கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் பென்சிகர், கிறிஸ்டோபர், முக்குவர் சேவை மன்ற நிர்வாகிகள் மகேஷ் லாசர், ஹென்றி, மரிய தாசன், மீனவர் முன்னேற்ற கழகம் அலங்காரம் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுக திட்டங்கள் சாத்தியமின்றி மத்திய அரசு கைவிட்ட நிலையில் பாதுகாப்பு துறைமுகம் என்ற பெயரில் மீண்டும் அமைக்க முயற்சிக்கும் நபர்களை கண்டிப்பது, இதுபோன்ற திட்டங்களை குமரி மாவட்டத்தில் அனுமதிக்க முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டது.