ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்


ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
x

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 278 மனுக்கள் பெறப்பட்டது.

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில், 27 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் அட்டை, ஊரக வளர்ச்சி ‌துறை சார்பில், வசந்தி என்ற‌ பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை ஆட்சியர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story