மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கரூர்

தாந்தோணிமலையில் உள்ள கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இதில் 336 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 44 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,11,666 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வருவாய்த்துறை சார்பில் 2 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தூய்மை நிகழ்வுகள் -2022 என்ற தலைப்பில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு அந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை பண்பாட்டு துறையின் சார்பில் 2021-2022 ஆண்டுக்காக பரதநாட்டியம், குரலிசை, நாதஸ்வரம், சிலம்பம், நாடகம், தவில், மிருதங்கம், கிராமிய நடனம், ஹார்மோனியம் உள்ளிட்ட கலை புலமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகளை ஒவ்வொரு தலைப்பிலும் 3 பேருக்கு என 15 பேருக்கு ரொக்கப் பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.


Next Story