ஆரணியில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் முதல் முறையாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர் கடன்கள், தாட்கோ மூலம் கடன் உதவி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஆரணி, கலசபாக்கம், போளூர், ஜமுனாமத்தூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள் நன்றி கூறினார்.